விருத்தாசலம், செப். 22 | புரட்டாசி 06:
கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், "தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்" விருத்தாசலம் வானொலி திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நகர செயலாளர் தண்டபாணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
மூத்த உறுப்பினர்கள் மற்றும் முக்கியர் நிர்வாகிகள், மாவட்ட அவை தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், விருத்தாசலம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம். எஸ். கணேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக. கோவிந்தசாமி, பாவாடை கோவிந்தசாமி, ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலையில் மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பத்மபிரியா உரையாற்றினார்.
முடிவில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் ராமு நன்றி கூறி நிகழ்ச்சி நிறைவு செய்தார். இக்கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment